மும்பை,ஜன.30: மும்பையில் குடிபோதையில் காரை மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவரைக் கொன்ற இளம் பெண்ணை போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டது: தெற்கு மும்பையின் கோலபா பகுதியில் வசித்து வருபவர் நூரியா ஹவெலிவாலா (27). அழகுக்கலை நிபுணரான இவர், சனிக்கிழமை காலை நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். வேகமாக காரை ஓட்டிவந்த நூரியா, மரைன் டிரைவ் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸôர் மீது காரில் மோதினார்.
இதில் அப்சல் கனோஜியா என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தினா நாத் ஷிண்டே என்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸôர் காயமடைந்தனர். இதில் தினா நாத் ஷிண்டே பலத்தக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்தில் உயிரிழந்தார்.
நூரியாவை போலீஸôர் உடனே கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதை உறுதி செய்ய மருத்துவ சோதனை செய்யப்பட்டது. மருத்துவ சோதனையில் அவர் மது அருந்தியிருந்தது உறுதியானது.
நூரியாவை பிப்ரவரி 5-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.