9 நாட்களிலும் தினசரி விபூதி, சந்தனம், குங்குமம், பூக்கள், தங்க ஆபரணங்கள், உணவுப் பொருட்கள் என விதவிதமான சிறப்பு அலங்காரங்களில் மூலவர் மகா வல்லப கணபதி மிக அற்புதமாகக் காட்சியளித்தார். சதுர்லட்ச மூல மந்திர ஜபம் (நான்கு லட்சம் முறை மூல மந்திரத்தை ஜபித்தல்), யாகசாலை பூஜை மற்றும் உற்சவ மூர்த்தியுடன் நாதசுர இசை முழங்க பிரகார ஊர்வலம், மகா ஆராதனை என தினசரி நிகழ்வுகள் ஒன்பது நாட்களிலும் மிக விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் கடைசி நாளான செப்டம்பர் 4ந் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ரத யாத்திரை மிகச்சிறப்பாக இருந்தது. சுமார் 3 மணி நேரம் நியூயார்க் நகர வீதிகளில் வலம் வந்த ரத யாத்திரையில் சிறுவர்கள், சிறுமியர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நடனமாட, பெரியோர்கள் பலர் விநாயகர் பக்திப் பாடல்கள் பாடிவர, ரதயாத்திரை நடைபெற்ற பகுதி முழுவதும் திருவாழாக்கோலம் கொண்டிருந்தது.
கோவிலுக்கு வந்தவர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. கனடாவிலிருந்து வந்திருந்த சிவகுருநாதன் குழுவினரின் நாதஸ்வர தவிலிசை 9 நாள் கோவில் வைபவங்களுக்கும், ரத யாத்திரைக்கும் மேலும் பெருமை சேர்த்தது.
இந்த விழா மிகச்சிறப்பாக அமைய கோவில் நிராவ்கத் தலைவர் டாக்டர் உமா மைசூரேக்கர் தலைமையில் அனைத்து சிவாச்சார்யார்களும், கோவில் பணியாளர்களும், சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களும் இரவு பகல் பாராது முழு அர்ப்பணிப்புடனும், பேரார்வத்துடனும் செயலாற்றியது மிகவும் பாராட்டத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.