ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

"பலாத்கார வழக்கு விசாரணை வேகமாக நடைபெற வேண்டும்'

தில்லியில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை வேகமாக நடைபெற வேண்டும் என்று அவரது ஆண் நண்பர் கோரியுள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 7:16 pm

தினமணி

தில்லியில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை வேகமாக நடைபெற வேண்டும் என்று அவரது ஆண் நண்பர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில், அமாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

இந்த வழக்கு விசாரணை விரைவாக, மூன்று மாதங்களுக்குள் முடிவடைய வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கை. இப்போது இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தனது கடமையைச் செய்து வருகின்றனர். இதை அவர்களிடமே விட்டு விடுவோம்.

"விரைவு நீதிமன்றங்களை அமைப்போம்' என்று சொல்வதே பொருத்தமற்றதாக உள்ளது. அப்படியானால் மற்ற நீதிமன்றங்கள் மெதுவான நீதிமன்றங்களா? மக்கள் தங்களது வழக்குகளில், குறிப்பாக இது போன்ற வழக்குகளில் விரைவாக நீதியைப் பெற வேண்டும்.

அனைத்து நீதிமன்றங்களும் துரிதப்படுத்தப்பட்டு, இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் விரைவாக நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.