ஐதராபாத் அருகே உள்ள மாதாப்பூரைச் சேர்ந்த 13 வயது மாணவி கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதாப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள் மாணவி. இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால் எந்தவித சலனமும் இன்றி அதனை மறைத்து தினமும் பள்ளிக்கு வந்துள்ளார் மாணவி. சம்பவத்தன்று பள்ளிக்கு வந்த மாணவி ஆசிரியர் வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும் போது மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். கழிவறை செல்ல வேண்டும் என்று ஆசிரியரிடம் அனுமதி கூறியுள்ளார். அதற்கு ஆசிரியை அனுமதி அளித்துள்ளார்.
கழிவறையில் சென்ற மாணவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கழிவறையிலேயே மாணவி பெண் குழந்தையை பெட்றெடுத்தாள். கழிவறை முழுக்க ரத்தம் இருந்ததைப் பார்த்த சக மாணவி ஆசிரியையிடம் தெரிவித்தார். ஆசிரியை வந்து பார்த்த போது தான் மாணவி குழந்தை பெற்றது தெரிய வந்தது. மாணவி கர்ப்பமாக இருந்தது கூட அறியாமல் ஆசிரியர்கள் இருந்தது தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாணவி கர்ப்பமாக இருந்தது பெற்றோர்களுக்கு முன்பே தெரியும் என்று போலீசார் கூறியுள்ளனர். ஆனால் அதனை மறைக்கும் வகையில் ஆடை அணியச் செய்து பள்ளிக்கு அனுப்பி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. மாணவி கர்ப்பத்துக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த தாணு என்ற வாலிபர் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். மேலும், மாணவியின் வகுப்பாசிரியருக்கு பள்ளி நிர்வாகம் மெமோ வழங்கியுள்ளது. இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

