

இந்தியாவில் உள்ள 100க்கு அதிகமான தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் பிரதான நேரங்களில் 12 நிமிஷத்துக்கும் அதிகமாக விளம்பரங்களை ஒளிபரப்புவதாக மத்திய தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (TRAI) கூறியுள்ளது.
தனியார் தொலைகாட்சிகளில் அளவுக்கு அதிகமாக விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாக பார்வையாளர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து டிராய் தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் ஒரு மணி நேரத்துக்கு 12 நிமிஷத்துக்கு அதிகமாக விளம்பரங்கள் ஒளிபரப்பக் கூடாது என கடந்த 2013ல் அறிவித்தது.
இதற்கு தடை கோரி தொலைகாட்சி நிறுவனங்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அடுத்த உத்தரவு வரும் வரை இதற்கு தடைவிதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும், தொலைகாட்சி நிறுவனங்கள் தாங்கள் ஒளிபரப்பு குறித்த விவரங்களை டிராய்க்கு அளிக்க ஆணையிடப்பட்டது.
இதன்படி, கடந்த ஜூன் 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 27 கட்டண செய்தி தொலைகாட்சி நிறுவனங்களும், 112 கட்டண தொலைகாட்சி நிறுவனங்களும் 12 நிமிஷத்துக்கும் அதிகமாக விளம்பரங்களை ஒளிபரப்பியது தெரியவந்துள்ளது.
இதில் பல தொலைகாட்சிகள் ஒரு மணி நேரத்தில் 20 நிமிஷம் அளவுக்கு விளம்பரங்களை காட்டியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.