நிதி முறைகேடுகளில் ஈடுபடும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் குறித்த விவரங்களையும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிதி முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் தகவல்களை வழங்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் அளித்த உத்தரவை எதிர்த்து பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகள், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டன.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.ஓய்.இக்பால் மற்றும் சி.நாகப்பன் ஆகியோர், நிதி முறைகேடுகளில் ஈடுபடும் வங்கிகள், நிதிநிறுவனங்கள் குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க வேண்டும்.
நம்பிக்கை என்ற போர்வையின் கீழ் நிதிநிறுவனங்கள் குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி மறைக்கக் கூடாது.
பொதுமக்கள் கேட்கும் தகவல்களை இரு நிறுவனங்களுக்கு இடையேயான 'நம்பிக்கையான உறவு', 'பொருளாதார பலன்' என்ற போர்வையில் வழங்காமல் இருப்பது ரிசர்வ் வங்கி குறித்து பொதுமக்கள் இடையே ஒரு சந்தேகத்தையும், நம்பிக்கையின்மையும் ஏற்படுத்தும்.
தகவல் உரிமை சட்டத்தின் படி, ரிசர்வ் வங்கி சோதனையின் போது கைப்பற்றப்படும் ஆவனங்கள், வழங்கப்படும் அறிக்கைகள் ஆகியவை 'தகவல்கள்' என்ற அடிப்படையில் அனைவருக்கும் வழங்கலாம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.