நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 426 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், மூன்று உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 12 கூடுதல் நீதிபதிகளின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனால் தற்போதைக்கு புதிய நீதிபதிகள் நியமனம் ஏதும் இல்லாத நிலையில், மூன்று உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 12 கூடுதல் நீதிபதிகளின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய சட்ட அமைச்சகம் ஆணைப் பிறப்பித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ஆந்திர பிரதேசம்-தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் 10 நீதிபதிகளுக்கும், ஜார்கண்ட் மற்றும் கேரள உயர் நீதிமன்றத்தில் தலா ஒரு நீதிபதிக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 1029 நீதிபதிகளுக்குப் பதில் தற்போது 603 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 426 காலி இடங்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.