திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சுநீல் குமார் சௌத்ரி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
முதுமை காரணமாக ஏற்பட்ட தாங்கமுடியாத வலியால், சப்ரூம் நகரில் உள்ள அவரது வீட்டில் ஒரு மரத்தில் சௌத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
86 வயதான சௌத்ரி திரிபுரா மாநில சட்டப் பேரவைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும், சட்டப் பேரவை துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
மறைந்த சௌத்ரியின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
தற்போது கொல்கத்தாவில் இருக்கும் திரிபுரா மாநில முதல்வர் மானிக் சர்க்கார் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், சௌத்ரியின் மரணம் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார்.
திரிபுரா மாநில மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், சௌத்ரி கட்சிக்கு அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது. சௌத்ரி ஓர் அருமையான ஒருங்கிணைப்பாளர். சமூக ஒற்றுமைக்காகவும், அமைதிக்காகவும் அதிகமாக பணியாற்றியவர் என்று குறிப்பிட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரிவதற்கு முன்பே 1953 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்த சௌத்ரி, பிரிவுக்குப் பின்னர் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியில் 1964-ல் இணைந்தார்.
மறைந்த சௌத்ரிக்கு மனைவி, 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

