உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
தேசிய புலனாய்வு அமைப்பின் லக்னோ கிளைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பயங்கரவாதம், தீவிராவதம் மற்றும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளோம். இது தொடருமானால் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை பெற முடியும்.
தேசிய புலனாய்வு அமைப்பு சிக்கல்கள் நிறைந்த குற்ற வழக்குகள், பயங்கராவதம், தீவிரவாதம் மற்றும் மவோயிஸ்ட் குறித்த வழக்குகளில் உலக அளவில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தின் பங்கு மிகுந்த சாவல்கள் நிறைந்ததாக உள்ளது.
இன்றைய குற்றவாளிகள் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தும் நிலையில், விசாரணை அமைப்புகள் பழைய முறையை கையாள முடியாது. எனவே, புலனாய்வு அமைப்புகளும் நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தேசிய புலனாய்வு அமைப்பு இந்திய நாட்டு மக்களுக்காக மட்டுமன்றி, உலக அரங்கிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறது. மேலும், அது, நடுநிலை மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த புலனாய்வு அமைப்பாக உலக அரங்கில் பெயரெடுத்துள்ளது.
உலகிற்கே பயங்கர அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாத செயல்பாடுகள் இந்தியாவில் ஏறக்குறைய இல்லை. இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளை அந்த அமைப்புகளுக்கு செல்வதை தடுத்துவிட்டனர். இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் இந்திய மதிப்புகளில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதம் பரவுவதற்கு வாய்ப்பே இல்லை. ஐ.எஸ். தீவிரவாதத்துக்கு எதிராக இமாம்கள் நடத்திய பேரணியே இதற்கு சான்று.
உலகில் உள்ள முஸ்லிம்களில் 72 பிரிவினரும் அமைதியாக வசிக்கும் ஒரே நாடு இந்தியா தான்.
இந்தியா எப்போதும் சகிப்புதன்மை மிகுந்த நாடாகவே இருக்கிறது. பார்சிகள் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியபோது, இந்தியா அவர்களுக்கு மரியாதை அளித்து பாதுகாப்பு அளித்தது என்றார் ராஜ்நாத் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


