ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினர் தங்களது பதக்கங்களை திருப்பி அளிப்பது என முடிவு செய்துள்ளனர்.
போராட்டம் நடத்தி வரும் அனைவரும் ஒன்றிணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய முன்னாள் ராணுவத்தினர் அமைப்பின் தலைவர் கேப்டன் வி.கே. காந்தி கூறினார்.
புதுதில்லியின் ஜந்தர்மந்தரில் கடந்த 145 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினர் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்துள்ளனர்.
இதன்படி, நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் அனைத்து முன்னாள் ராணுவத்தினரும் தங்களது பதக்கங்களை இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் திருப்பி அளிப்பார்கள். அதை பெறும் மாவட்ட ஆட்சியர்கள் அதை பிரதமருக்கோ அல்லது குடியரசு தலைவருக்கோ அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம் என்றார்.
மாவட்ட ஆட்சியர்கள் பதக்கங்களை பெறாதபட்சத்தில அவற்றை அவர்களது அலுவலகத்திலேயே வைத்துவிட்டு வருவோம் என்றார் காந்தி
அரசு அறிவித்துள்ள ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது என்று கூறிய காந்தி, அது ஒரே பதவி ஐந்து ஓய்வூதியம் என்பதாய் உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


