இந்தியாவில் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளியிடுவோர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் தேசத்தை கவலையடையச் செய்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாளையொட்டி, புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டை தொடக்கிவைத்து மன்மோகன் பேசினார்.
மாற்று கருத்துகளை வெளியிடும் சிந்தனையாளர் மீதான தாக்குதல் அல்லது அவர்கள் கொலை செய்யப்படும் சூழலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் மன்மோகன்.
இத்தகைய நிகழ்வுகளுக்கு அனைத்து நேர்மறை சிந்தனையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்தகைய தாக்குதல்கள் என்பது தேசத்தின் மீதான தாக்குதல் போன்றது என்றார் மன்மோகன்.
வன்முறையாளர்களால் சமீபத்தில் நடைபெற்ற துயரமான சம்பவங்கள் அனைத்தும் கருத்து சுதந்திரம், நம்பிக்கை, பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான அப்பட்டமான தாக்குதலாகும். இந்நிகழ்வுகளால் நாடு மிகுந்த கவலையடைந்துள்ளது.
கருத்து வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளாதவர்களால் இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றார் முன்னாள் பிரதமர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


