பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்ட நிலையில், துருக்கி சென்றடைந்துள்ள இந்திய பிரதமர் மோடி, உலக மக்கள் அனைவரும் பயங்கரவாததுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-20 கூட்டமைப்பு கூட்டம், துருக்கியில் உள்ள அண்டாலியா நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, ஜி-20 கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.
அங்கு பேசிய மோடி, உலக மக்கள் அனைவரும் இணைந்து ஒரு குழுவாக இணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே, பாரீஸ் தாக்குதலையடுத்து, பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் அண்டாலா நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 13,000 அதிகாரிகளும், 3,000 பத்திரிக்கையாளர்களும் பங்கேற்க இருக்கும் இக்கூட்டத்துக்கான பாதுபாப்பு பணியில் 12,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 350 ஆளில்லா குட்டி விமானங்கள் (Drone) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


