வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பதாஞ்சலி நூடூல்ஸ்- மேகிக்கு போட்டியாக பாபா ராம்தேவ் அறிமுகம்

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடூல்ஸ் தடை செய்யப்பட்டு மறுபடியும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் யோகா குரு பாபா ராம்தேவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதாஞ்சலி நுடூல்ஸ் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2015, 10:41 am

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடூல்ஸ்  தடை செய்யப்பட்டு மறுபடியும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் யோகா குரு பாபா ராம்தேவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதாஞ்சலி நுடூல்ஸ் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

முழு கோதுமை மாவால் தயாரிக்கப்பட்டுள்ள, இந்த நூடூல்ஸ் 70 கிராம் பாக்கெட் ரூ. 15க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள பிக் பசார், நீலகிரி பல்பொருள் அங்காடிகள் மூலம் பதாஞ்சலி நூடூல்ஸ் விற்பனை செய்யப்படும்.

நூடூல்ஸ் அறிமுக விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம் தேவ், நூடூல்ஸ் விற்பனையில் கிடைக்கும் லாபம் கல்வியில் பின்தங்கியுள்ள குழந்தைகளின் மேம்பாட்டுக்காக செலவிடப்படும் என்றார்.

இந்தியர்களுக்காக இந்தியாவிலே தயாரிக்கப்படும் சத்தான உணவு என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த நூடூல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார் ராம்தேவ்.

அடுத்த ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் ஆறு உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்படும். தலைநகர் தில்லியில் தொடங்கப்படும் உற்பத்தி நிலையம் மூலம் 100 முதல் 200 டன் நூடூல்ஸ் உற்பத்தி செய்யப்படும் என்றார்.

பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக தொடங்கப்பட்டுள்ள பதஞ்சலி நிறுவனம் மூலம் பழச்சாறுகள், ஆரோக்கிய பானங்கள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.