வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆந்திர கன மழை: சென்னை- விஜயவாடா சாலை துண்டிப்பு; 5 பேர் பலி

ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கன மழைக்கு ஐந்து பேர் பலியாகியுள்ளனர். சென்னை- விஜயவாடா சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2015, 9:20 am

வங்க கடலில் உருவான காற்றதழுத்த தாழ்வுநிலை வடமேற்கு நோக்கி நகர்ந்ததால், ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன.

தமிழகத்தையொட்டியுள்ள சித்தூர், நெல்லூர், கடப்பா மாவட்டங்கள் இந்த மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்கலை வெள்ள நீர் சூழ்ந்து போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இருவரை காணவில்லை. மேலும், 80 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 80 கால்நடைகளும் இறந்துள்ளன.

நெல்லூர் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு தனித் தீவாக காட்சி அளிக்கின்றன. மாவட்டத்தில் உள்ள சுமார் 100 குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதுவரை 5,000 பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள சேதம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 10,000 உணவு பொட்டங்கள் தயாராக உள்ளதாக, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் பி. நாராயணன் கூறினார்.

மேலும், வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பதற்காக இந்திய விமானப் படையின் இரு ஹெலிகாப்டர்கள் சென்னையில் தயாராக இருக்கிறது என்ற அமைச்சர் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியை மேற்கொள்ள இயலவில்லை என்றார்.

தேசிய பேரிடர் மீட்பு படையினரும் நெல்லூரில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பலத்த மழை காரணமாக சென்னை- விஜயவாடா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மும்பை- நெல்லூர், நாயுடுபேட்டா- சுல்லூர்பேட்டா சாலைகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரதிதல் சித்தூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் 20 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. நெல்லூரில் மாவட்டத்தில் 30 செ.மீ மழை பெய்துள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு கோதவரி மாவட்டங்களிலும் திங்கள்கிழமை இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.