ஹைதரபாத் நகரில் இன்று காலை நிகழ்ந்த சோக சம்பவத்தில் ஐந்து வயது மாணவி ஒருவர் லிப்டின் கதவுகளுக்கு இடையே சிக்கி பரிதாபமாக இறந்தார்.
மலாக்பேட் பகுதியின் முஸ்ராம்பக் என்ற இடத்தில் உள்ள ஸ்டார் கிட்ஸ் பள்ளியில், இன்று காலை முதலாம் வகுப்பு மாணவி ரஹீனா ஃபாத்திமா (5), மூன்றாம் மாடியில் உள்ள தனது வகுப்பு செல்ல முயன்றார். அப்போது எதிர்பாரதவிதமாக லிப்டின் இரு கதவுகளுக்கு இடையே சிக்கி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளியில் குவிந்தனர். கவனக்குறைவாக இருந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டகாரர்களை சமாதானப்படுத்தினர். மேலும், சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

