வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நாயைவிட மனித உயிர் மேலானது: தெருநாய்களை கொல்லும் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

நாய்களை விட மனித உயிரே மேலானது. எனவே, மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை அப்புறப்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

News image
Updated On :18 நவம்பர் 2015, 4:17 pm

நாய்களை விட மனித உயிரே மேலானது. எனவே, மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்துக்குட்பட்டு அப்புறப்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த பல தெரு நாய்கள் கொத்து கொத்தாக பிடிக்கப்பட்டு, மாநகராட்சி நிர்வாகம் கொலை செய்தது.

மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில், சுமார் 2.5 லட்சம் தெருநாய்களை அப்புறப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்துக்குட்பட்டு, நாய்களை கொலை செய்யலாம் என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்திய விலங்குகள் நல வாரியமும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாய்களின் வாழ்நாளை விட மனித உயிர்களே மேலானது என்று இன்று தீர்ப்பளித்தது.

உள்ளாட்சி அமைப்புகள் 2001 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விலங்குகள் வதை தடுப்பு சட்டம் மற்றும் பிறப்பு கட்டுபாடு விதிகளின் கீழ், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்கள், ராபீஸ் தாக்குதலுக்குள்ளான மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை கொலை செய்யலாம் என்றனர்.

மேலும், அனைத்து உயர் நீதிமன்றங்களும் 1960 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விதிகள் குறித்து எவ்வித உத்தரவும் வழங்க வேண்டாம் எனவும் கேட்டு கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.