வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல்: மூன்று பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட ஐவர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், பிரிவினைவாதிகள் இன்று காலை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மூவரும், பொதுமக்கள் இருவரும் காயமடைந்தனர்.

Updated On :20 நவம்பர் 2015, 9:13 am

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், பிரிவினைவாதிகள் இன்று காலை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மூவரும், பொதுமக்கள் இருவரும் காயமடைந்தனர்.

ஸ்ரீநகரிலிருந்து சுமார் 14 கிமீ தூரத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இத்தாக்குதல் நடைபெற்றது.

முக்கிய விருந்தினர்கள் செல்லும் பாதையை பராமரிக்கும் பணியை (Road Opening Party) மேற்கொண்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸார் மீது, பிரிவினைவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் 3 வீரர்களும், 2 பொதுமக்களும் காயமடைந்தனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸார் தாக்குதல் நடைபெற்ற இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன, போக்குவரத்தும் தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.