நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மை குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து தில்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.
தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில், பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்றார்.
ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் மக்களிடையே சகிப்பின்மையை உருவாக்கி வருகின்றனர். மேலும், அவர்களில் பலர் பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர்.
அஸ்ஸாம் மாநில ஆளுநர் இந்தியா இந்துக்களுக்கே, முஸ்லீம்கள் பாகிஸ்தான் அல்லது சிரியாவுக்கு சென்றுவிடுங்கள் என்கிறார். அவர்கள் அனைவரும் இந்தியா ஒர் ஒற்றுமையான நாடு என்பதை மறந்துவிட்டனர்.
பாஜகவினர் கவனம் தேநீரிலிருந்து தற்போது மாடுகளுக்கு மாறிவிட்டது என்ற சிந்தியா, பிரதமர் மோடி இதுவிஷயத்தில் மௌனமாகவே இருப்பதாக குற்றம்சாட்டினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீஸார் தண்ணீரை பீச்சி அடித்து கலைத்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


