வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆந்திரா பிரிக்கப்பட்டதில் அவசரம்: நரேந்திர மோடி

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியதில் முந்தைய அரசு அவசரம் காட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :22 அக்டோபர் 2015, 10:40 am

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியதில் முந்தைய அரசு அவசரம் காட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

அமராவதி நகரத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட சமயத்தில் நடந்த வன்முறைகளில், உயிரை இழந்தவர்களும், வீடுகள், வாகனங்களை இழந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆந்திரா மற்றும் தெலங்கானா பிரிப்பு எவ்வித ஏற்பாடுகளும் இன்றி, மிக அவசரமாக நடந்து முடிந்துள்ளது. மாநிலத்தைப் பிரித்தபோது ஏற்பட்ட சேதங்கள் இன்னமும் எனக்கு வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

மேலும், பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிகழ்ந்த பல விஷயங்கள் இன்னமும் நமக்கு கவலை அளிப்பதாக இருக்கும். அதுபோலத்தான், முந்தைய அரசும் செய்த காரியங்களும். ஆந்திரா - தெலங்கானா இடையே எப்போதும் ஒரு பதற்றம் இருக்கிறது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.