குஜராத் மாநிலத்தில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
குஜராத் மாநிலம் வடோதரா - ஆமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தின் டயர்களிலுள்ள காற்றழுத்தத்தைப் பரிசோதிப்பதற்காக, அந்தப் பேருந்தை ஓட்டுநர் சாலையோரம் நிறுத்தியுள்ளார்.
அப்போது, எதிரே வந்த வாகனம் அந்தப் பேருந்தின் மீது மோதியுள்ளது. அதைத் தொடர்ந்து, மற்றொரு வாகனம் பேருந்தின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.