வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மெஹபூபா முஃப்தி பதவியேற்பு விழாவில் வெங்கைய்யா நாயுடு, ஜிதேந்திர சிங் பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா முஃப்தி வரும் திங்கள் அன்று பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய்யா நாயுடு, ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

News image
Updated On :2 ஏப்ரல் 2016, 7:35 am

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா முஃப்தி வரும் திங்கள் அன்று (ஏப்ரல் 4) பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய்யா நாயுடு, ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

பிடிபி கட்சியின் நிறுவனர் முஃப்தி முகமது சயீது மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து புதிய அரசு அமைவதில் சிக்கல் எழுந்தது.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி அண்மையில் சந்தித்துப் பேசினார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதையடுத்து மாநில சட்டப்பேரவை பிடிபி கட்சித் தலைவராக மெஹபூபா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராவதற்கு பாஜகவும் ஆதரவளித்தது. இந்நிலையில், மெஹபூபா வரும் 4-ம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

ஜம்முவில் உள்ள ராஜ் பவனில் வரும் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மாநில ஆளுநர் என்.என். வோரா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, ஜிதேந்திரா சிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.