வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மும்பை குண்டு வெடிப்பு: 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

மும்பையில் கடந்த 2002, 2003ஆம் ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்கில், மும்பை பொடா சிறப்பு நீதிமன்றம் 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

News image
Updated On :6 ஏப்ரல் 2016, 7:39 am

மும்பையில் கடந்த 2002, 2003ஆம் ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்கில், மும்பை பொடா சிறப்பு நீதிமன்றம் 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

மும்பையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் பன்னாட்டு நிறுவனத்தின் கடையில் கடந்த 2002ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

மும்பை விலேபார்லே சந்தையில் கடந்த 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். அதே ஆண்டில் மார்ச் மாதம் முலுண்ட் ரயிலில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 12 பேர் பலியாகினர்.

இந்த குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்கு விசாரணை, மும்பையில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில், 10 பேரை குற்றவாளிகளாக நீதிமன்றம் கடந்த 29ஆம் தேதி அறிவித்தது.

அவர்களுக்கான தண்டனை விவரங்கள், மும்பை பொடா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 10 பேருக்கும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.

குற்றவாளிகளான சாகீப் நாச்சான், ஆதிப் முல்லா, ஆசிப் முல்லா ஆகிய மூன்று பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முசமில் அன்சாரி என்பவருக்கு ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.