கொச்சி: கேரள மாநிலம் கக்கநாட் - எர்ணாகுளம் செல்லும் வழியில் தனியார் பேருந்தில் ஏறியவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும்... இனிய குரலில் இளம் பெண் ஒருவர் சில்லறை அடங்கிய பையைக் குலுக்கியவாறு 'டிக்கெட் டிக்கெட்' என்று சொல்வதுதான்.
விண்வெளி முதல் ஆட்டோ ஓட்டுவது வரை அனைத்துத் துறையிலும் பெண்கள் தங்களது திறமையை நிரூபித்துவிட்டார்கள். இந்த நிலையில், கொச்சி தனியார் பேருந்து சேவை நிறுவனத்தில், பெண் ஒருவர் நடத்துநர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
துத்தியூரைச் சேர்ந்த 23 வயது பெண் எம்.கே. லினி, கொச்சின் என்ற தனியார் பேருந்து சேவை நிறுவனத்தில் நடத்துநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது பணியை நேற்று துவக்கினார். அவரிடம் இருந்து எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் எம்.ஜி. ராஜமாணிக்கம் முதல் டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டார்.
பேருந்துகளில் நடத்துநர் பணியை பெண்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆட்சியர் ராஜமாணிக்கம், பேருந்து நடத்துநர் பணிக்கு 24 பெண்கள் பயிற்சி எடுத்து இன்று முதல் தங்களது பணியை துவக்குகின்றனர். இது வரவேற்பைப் பெற்றால், ஏராளமான குடும்பப் பெண்கள் இப்பணியில் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் தனியார் பேருந்துகளில் நடத்துநர்களுக்கான பற்றாக்குறையும் தீரும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை: தொல். திருமாவளவன்

அரியலூா் மாவட்டத்தில் வரிசையில் நின்று ஆா்வமுடன் பொதுமக்கள் வாக்களிப்பு

திருச்சி மாவட்டத்தில் புதுமணத் தம்பதிகள் வாக்களிப்பு!

பொன்னேரி ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


