இந்த வருட கடைசியோட வாட்ஸப்  வராது: யார் யாருக்கு தெரியுமா?

சில குறிப்பிட்ட பழைய வகை அலைபேசிகளை பயன்படுத்துபவர்கள், தங்களுடைய அலைபேசியை தொழில் நுட்ப ரீதியாக 'அப்டேட்' செய்து கொள்ளா விட்டால் அவர்களால் 2017-ஆம் ஆண்டில் வாட்சப் சேவையை ...
இந்த வருட கடைசியோட வாட்ஸப்  வராது: யார் யாருக்கு தெரியுமா?

நியூயார்க்: சில குறிப்பிட்ட பழைய வகை அலைபேசிகளை பயன்படுத்துபவர்கள், தங்களுடைய அலைபேசியை தொழில் நுட்ப ரீதியாக 'அப்டேட்' செய்து கொள்ளா விட்டால் அவர்களால் 2017-ஆம் ஆண்டில் வாட்சப் சேவையை பயன்படுத்த முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வாட்சப் நிறுவன செய்தித்தொடர்பாளரின் அறிக்கையை மேற்கோள் காட்டி 'தி மிரர்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பழைய வகை அலைபேசிகள் வாட்ஸப்பின் வளர்ச்சிக்கு வெகுவாக உதவியிருக்கின்றன. ஆனாலும் தற்போது புதிய வகை பயன்பாடுகளை எதிர்காலத்தில் கொண்டு வரும் பொழுது, அதற்கு தேவையான தொழில் நுட்ப வசதிகளை இந்த அலைபேசிகள் கொண்டிருக்கவில்லை.

எனவே அடுத்த ஏழு வருடங்களை மனதில் கொண்டு உழைக்கும் போது, பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் அலைபேசி தொழிநுட்பங்களுக்கு ஏற்றவாறே நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

அதன்படி ஆப்பிள் ஐபோன்களை பொறுத்த வரை 3 ஜி எஸ் வகை போன்கள் மற்றும் ஐ ஓ எஸ் 6 செயலிகளில் இயங்கும் ஐபோன்களில்  வாட்சப் செயல்படாது.

அதேபோல் ஐ பேடுகளில் முதல்,இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறை சார்ந்த கருவிகள் ஐ ஓ எஸ் 9.3 க்கு 'அப்டேட்' செய்யப்படாவிட்டால் வாட்சப் அவற்றிலும் இயங்காது.

ஆண்டிராய்டு செயலிகளில் இயங்கும் அலைபேசிகளில் 2.1 மற்றும் 2.2 பதிப்புக்களில் இயங்கும் அலைபேசிகளில் வாட்சப் செயல்படாது. விண்டோஸ் போன்களைப் பொறுத்த வரை  விண்டோஸ் 7 வகை போன் 'அப்டேட்' செய்யப்படாவிட்டால் அதுவும் இயங்காது.

அதே சமயத்தில் பிளாக்பெர்ரி செயலி, பிளாக்பெர்ரி 10, நோக்கியா s40. நோக்கியா சிம்பியான் s60 வகை போன்களில் வாட்சப் சேவையானது ஜூன் 30, 2017 வரை செயல்படும்.

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com