மத்திய அரசின் அடுத்த திட்டம் என்ன? பகிரங்கப்படுத்தினார் அருண் ஜேட்லி

பழைய ரூபாய் நோட்டுகளுக்கு ஈடாக புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படாது என்று மத்திய அரசின் அடுத்த திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று வெளியிட்டார்.
மத்திய அரசின் அடுத்த திட்டம் என்ன? பகிரங்கப்படுத்தினார் அருண் ஜேட்லி


புது தில்லி: பழைய ரூபாய் நோட்டுகளுக்கு ஈடாக புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படாது என்று மத்திய அரசின் அடுத்த திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தெரிவித்தார்.

அதாவது, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடியாகும். இதே மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அச்சடித்து புழக்கத்தில் விடாது என்றும், இந்த இடைவெளியை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஈடுகட்டும் என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

தில்லியில் இன்று நடைபெற்ற ஃபிக்கிக் கூட்டத்தில் பேசிய அருண் ஜேட்லி, நிலையற்ற பொருளாதாரத்துடனே இந்தியா வெகுநாட்களுக்கு இருக்க முடியாது. அதனால்தான் பணமதிப்பிழப்பு என்ற முடிவை மத்திய அரசு எடுத்தது. புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடுவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த பணியை முடிக்க வெகு நாட்கள் ஆகாது. இந்திய ரிசர்வ் வங்கி இப்பணியை வெகு விரைவில் செய்து முடித்துவிடும் என்று கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் உயர்வதோடு, அதிக வரி வசூல் கிடைத்துள்ளது. கருப்புப் பணமும் கள்ள நோட்டும் ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மதிப்பிழக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு ஈடான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படாது. பணப் புழக்கத்தைக் குறைத்து, அந்த இடைவெளியை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஈடு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் அருண் ஜேட்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com