நவம்பர் 10 முதல் டிசம்பர் 19 வரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூபாய் எவ்வளவு தெரியுமா?

பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு பிறகு நவம்பர் 10 முதல் டிசம்பர் 19 வரையிலான காலகட்டத்தில் 5.92 லட்சம் கோடி ரூபாய் வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக... 
நவம்பர் 10 முதல் டிசம்பர் 19 வரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூபாய் எவ்வளவு தெரியுமா?

மும்பை: பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு பிறகு நவம்பர் 10 முதல் டிசம்பர் 19 வரையிலான காலகட்டத்தில் 5.92 லட்சம் கோடி ரூபாய் வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நவம்பர் 10 முதல் டிசம்பர் 19 வரையிலான காலகட்டத்தில் பொதுமக்களுக்கு வங்கிகளின் கவுன்டர்கள் மற்றும் ஏ.டி எம்கள் மூலமாக 5, 92,613 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் ரிசர்வ் வங்கிகளின் கிளை அலுவலங்கள் மூலமாக வங்கிகளுக்கு, 2260 கோடி ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 2040 கோடி ருபாய் அளவுக்கு 10, 20, 50 மற்றும் 100 உள்ளிட்ட சிறிய எண்ணிக்கையிலும், மீதமுள்ள 220 கோடி அளவுக்கு 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com