
புதுதில்லி: இந்தியாவின் புதிய ராணுவத்தளபதியாக ஜெனரல் பிபின் ராவத்தும், விமானப்படை தளபதியாக ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவாவும் இன்று பொறுபேற்றுக் கொண்டனர்.
இந்திய ராணுவத்தளபதியாக இருந்த ஜெனரல் தல்பிர் சிங் மற்றும் விமானப்படை தளபதியாக இருந்த ஏர் சீப் அரூப் ராஹா ஆகிய இருவரும் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். அதனைத் தொடர்ந்து புதிய தளபதிகள் இருவரும் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ராணுவத் தளபதி பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வானது தில்லி சவுத் பிளாக் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள புல்வெளியில்நடைபெற்றது. அங்கு விடைபெற்றுச் செல்லும் தளபதிக்கு 'கார்ட் ஆப் ஹானர்' என்னும் பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதேபோல கடற்படை தலைமையகமான வாயு பவனில் விடை பெற்றுச் செல்லும் தளபதி ராஹா மற்றும் புதிதாக பதவியேற்க உள்ள தளபதி தனோவா இருவருக்குமே 'கார்ட் ஆப் ஹானர்' என்னும் பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.