ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கோவாவில் கைது செய்யப்பட்டவரிடம் தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரணை

கோவாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரரின் மகனிடம் தேசிய புலனாய்வு துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.

Updated On :4 பிப்ரவரி 2016, 11:18 am

கோவாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரரின் மகனிடம் தேசிய புலனாய்வு துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.

மும்பையைச் சேர்ந்தவர் சமீர் சார்தனா (44). பட்டயக் கணக்காளரான இவர் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்காக ஹாங் காங், மலேசியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் வேலை செய்து வந்தார். பிறப்பால் இந்துவான சார்தனா தற்போது இஸ்லாமிய மார்கத்தை பின்பற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் வாஸ்கோ ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றி திரிந்த சார்தனாவை கோவா போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சார்தனா இந்தியாவில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவங்கள் குறித்த தகவல்களை சேகரித்து வந்துள்ளார். அவரிடமிருந்து 5 பாஸ்போர்ட்களும், ஒரு மடிக்கணினியும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் சார்தனாவிடம் விசாரணை நடத்திய அதிகாரி கூறுகையில், தற்போதைய நிலையில் பயங்கரவாதச் செயல்களில் அவர் ஈடுபட முயன்றதாக தகவல் ஏதும் இல்லை என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியையும், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கரையும் கொலை செய்ய போவதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடிதம் எழுதியிருந்ததைத் தொடர்ந்து கோவாவில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சார்தனா முன்னாள் ராணுவ வீரரின் மகனாவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.