தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க முதல் கட்ட குழு நாளை புறப்பாடு

அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க முதல்கட்டமாக 1,138 யாத்ரீகர்கள் கொண்டு குழு நாளை புறப்படுகின்றது.

News image
Updated On :1 ஜூலை 2016, 5:06 am

ஜம்மு: அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க முதல்கட்டமாக 1,138 யாத்ரீகர்கள் கொண்டு குழு நாளை புறப்படுகின்றது.

மாநில துணை முதல்வர் நிர்மல் சிங், துணை அமைச்சர் பிரியா சேத்தி மற்றும் மக்களவை உறுப்பினர் ஜூகல் கிஷோர் ஆகியோர் முன்னிலையில் காலை 5 மணிக்கு ஜம்முவில் உள்ள பகவதி நகர்  யத்ரா நிவாஸில் இருந்து யாத்ரீகர்கள் முதல் கட்ட குழு புறப்பட தயாரானது.

இந்த குழுவில் 900 ஆண்கள், 225 பெண்கள் மற்றும் 13 குழந்தைகள் என மொத்தம் 1,138 பேர் 13 பேருந்துகள், 24 மினி பேருந்துகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் அவர்களுடன் செல்ல உள்ளனர்.

அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் வழியில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், இந்தாண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. இதற்காக அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு செல்லவிருக்கின்றார். மேலும் அவர் அமர்நாத் குகையை தரிசிக்க உள்ளார். நாளை தொடங்கும் யாத்திரை இந்தாண்டு 48 நாட்கள் வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.