தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை: இதுவரை 30 பேர் பலி, பலர் மாயம்

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழைக்கு இதுவரை 30 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On :1 ஜூலை 2016, 10:38 am

டெராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழைக்கு இதுவரை 30 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பித்தோராகர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுவா கிராமத்தில் விவசாய பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு நாசமாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54 மீ.மி மழை பதிவாகியுள்ளது.

தால்-முன்ஸ்யாரி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 12-க்கு மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் அடித்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவிப்போர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மீட்புப் பணியில் ஈடுபட  தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு உள்துறை அமைச்சர் ராஜ்சிங் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.