உத்தரப்பிரதேசத்தின் இத்தா மாவட்டத்தில் வெள்ளி இரவு கள்ளச்சாராயம் குடித்த விபத்தில் ஐந்து பேர் பலியானார்கள். மேலும் பலருக்கு கண் பார்வை இழப்பும் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் இத்தா மாவட்டத்தில் உள்ள அலிகஞ்ச் பகுதியில் உள்ளது ஜோஹ்ரி தர்வாசா கிராமம். இங்கே வெள்ளி இரவு உள்ளூர்வாசிகள் சிலர் ஒன்று கூடி மது அருந்தினார்கள். அவ்வாறு மது அருந்தியவர்கள் சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்தல், குமட்டல் மற்றும் பார்வை மங்குதல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்தது செல்லப்பட்டார்கள். அவர்களில் ஐந்து பேர் மருத்துவமனையிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்கள்.
இறந்தவர்கள் ராம் அவதார் அதீக் , ரமேஷ், சர்வேஷ் மற்றும் நேத்ரபால் ஆகியோராவார்கள். கண்பார்வை இழந்தவர்களில் நரேஷ், விஜய், சர்வேஷ் , கல்லு மற்றும் அர்விந்த் ஆகியோர்கள் அடங்குவார்கள்.
சம்பவம் குறித்து அறிந்ததும் கடும் கோபமடைந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் மாவட்ட நீதிபதி, மாவட்ட கலால் அலுவலர், சரக அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோர்களை இடைக்கால பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


