பஞ்சாப் அரசியலில் இருந்து விலகி இருக்கச் சொன்னதால் எம்பி பதவி ராஜிநாமா: சித்து அதிரடி பேட்டி

பஞ்சாப் மாநில அரசியலில் இருந்து விலகி இருக்கும்படி பாஜக மேலிடம் வற்புறுத்திய காரணத்தால்தான், எம்பி பதவியை ராஜினாமா செய்தேன் என்று முன்னாள் ராஜ்ய சபா எம்.பி சித்து விளக்கமளித்துள்ளார்
பஞ்சாப் அரசியலில் இருந்து விலகி இருக்கச் சொன்னதால் எம்பி பதவி ராஜிநாமா: சித்து அதிரடி  பேட்டி
Updated on
1 min read

பஞ்சாப் மாநில அரசியலில் இருந்து விலகி இருக்கும்படி பாஜக மேலிடம் வற்புறுத்திய காரணத்தால்தான், எம்பி பதவியை ராஜினாமா செய்தேன் என்று முன்னாள் ராஜ்ய சபா எம்.பி சித்து விளக்கமளித்துள்ளார்.

தனது அதிரடி ஆட்டத்தின் மூலம்  கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நவஜோத் சிங் சித்து. இவர்  தனது கிரிக்கெட் விளையாட்டு பயணத்தை 1999-ம் ஆண்டு நிறுத்திக் கொண்டார்.

அதன்பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளராக புகழ்பெற்றார். அரசியலில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றார். 2009-ம் ஆண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு அமிர்தசரஸ் தொகுதி கொடுக்கப்படவில்லை.

இதனால், அவர் ஏமாற்றமடைந்த அவர் தொடர்ந்து கட்சிப்பணிகளை செய்து வந்தார். கட்சி மேலிடம் அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி அளித்தது. . அவர் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி சித்து, மாநிலங்களை எம்.பி.யாக பதவி ஏற்றார். ஆனால், மனவருத்தத்தில் இருந்த சித்து, கடந்த 18-ந்தேதி  பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜினாமா செய்த பிறகு முதன்முறையாக, சித்து இன்று டெல்லியில் அவரது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பஞ்சாப் என் சொந்த மண். ஆனால் பாஜக மேலிடம் என்னை பஞ்சாப் மாநில அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. ஒரு கட்டத்தில் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பஞ்சாபில் இருந்து விலகி இருப்பது என்பது முடியாத காரியம்.

எனக்கு பஞ்சாபின் நலனே முக்கியம். எனக்கு பஞ்சாபை விட எந்த கட்சியும் பெரிதல்ல.  என் வேரை விட்டு என்னால் விலகி இருக்க முடியாது. அதனால்தான் நான் எம்பி பதவியை ராஜினாமா செய்தேன்.

பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சியில் நான் இருப்பேன். பஞ்சாபுக்கும், அமிர்தசரசுக்கும் சேவை செய்யவே நான் எப்போது விரும்புகிறேன்.

இவ்வாறு சித்து கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com