

லாவோஸின் தலைநகர் வியன்டைனில் இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், மியான்மர் நாட்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரான ஆங் சான் சூகியை சந்தித்து பேசினார்.
கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் ஆறாவது மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டைனில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், அங்கே மியான்மர் நாட்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரான ஆங் சான் சூகியை சந்தித்தார்.
இது தொடர்பாக அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் புகைப்படத்தை வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக திங்களன்று வியன்டைனில் நடைபெற்ற ஆசியான் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டிலும் வி.கே.சிங் கலந்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.