தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்த வருடம் மேலும் 30,000 பயோ டாய்லெட்டுகள்: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல் !

இந்திய ரயில்களில் இந்த வருடம் புதிதாக மேலும் 30,000 பயோ டாய்லெட்டுகள் சேர்க்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :26 ஜூலை 2016, 3:51 pm

இந்திய ரயில்களில்  இந்த வருடம் புதிதாக மேலும் 30,000 பயோ டாய்லெட்டுகள் சேர்க்கபப்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர்  சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

டில்லியில் இன்று நடந்த விழா ஒன்றில் ரயில்வே துறை, இந்திய தொழில் துறை கூட்டமைப்புட ன் புரிந்துணர்வு  ஒப்பந்தம் ஒன்றை  செய்து கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில்வேக்கு சொந்தமான தயாரிப்பு மையங்களில் ஆற்றல் சேமிப்பு மற்றும் பசுமை தர மதிப்பீடு மற்றும் அது தொடர்பான ஆய்வுகளை செய்வதற்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த ஒப்பந்தம் மூலம் பசுமை தர மேம்பாடு தொடர்பான ரயில்வேயின் நடவடிக்கைகளை சர்வதேச அளவீடுகளுடன் ஒப்பிட்டுகே கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக இந்திய தொழில் துறை கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

க்ரீன்  கோ  என்ற அமைப்பை உருவாக்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம். குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மூலம் உண்டாகும் சுற்றுசூழல் பாதிப்புகளைக் களைவதற்கான பசுமை தர மேம்பாடு நடவடிக்கைகள் குறித்து க்ரீன்  கோ ஆலோசனைக ள் கொடுக்கும்.

முதல் கட்டமாக பெரம்பூர் மற்றும் வாரணசியில் உள்ள ரயில்வே பெட்டித் தொழிற்சாலைக ள் மற்றும் பெரம்பூரில் உள்ள பணிமனை ஒன்று ஆகியவை முதல்கட்ட பரிசீலனைக்கு தேர்தெடுக்கப்பட்டிருக்கின்றன. 

க்ரீன்  கோ அமைப்பு மிகப்பெரிய அளவிலான 10 செயல் வழி காரணிகள்  மூலம் இந்த மதிப்பீ ட்டு பணிகளை  நடத்தும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.