வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஹைதராபாத் பல்கலையில் மீண்டும் பதற்றம்: மார்ச் 27 வரை வகுப்புகள் ரத்து

ஹைதராபாத் பல்கலையில் மீண்டும் பதற்றம் நிலவி வருவதால் மார்ச் 27-ம் தேதி வரை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பா ராவ் அறிவித்துள்ளார்.

News image
Updated On :23 மார்ச் 2016, 6:55 am

ஹைதராபாத் பல்கலையில் மீண்டும் பதற்றம் நிலவி வருவதால் மார்ச் 27-ம் தேதி வரை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பா ராவ் அறிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 17-ம் பல்கலைக்கழக விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தொடர் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், நேற்று மாணவர்கள் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பா ராவ் வீட்டுக்குள் புகுந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

போராட்டத்தின்போது, துணைவேந்தர் மீது கடுமையாக குற்றம்சாட்டிப் பேசிய மாணவர்கள், ரோஹித் வேமூலாவின் சாவுக்கு முக்கியக் காரணமாக இருந்த துணைவேந்தர் மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு வரக் கூடாது என்றும், வேமூலாவை நாங்கள் இழந்துவிட்டோம். அதற்குக் காரணமானவர்களில் முக்கியமானவர் துணைவேந்தர். சம்பவம் நடந்து 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் துணைவேந்தர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருவதால் மார்ச் 27-ம் தேதி வரை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.