விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் திரிஷா!
நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதுப்படத்தில் நடிகை த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதுப்படத்தில் நடிகை த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் தற்போது விஜய் சேதுபதி முன்னணி கதாநாயகனாக உள்ளார். இந்த ஆண்டு மட்டும் அவர் நடிப்பில் ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி நடித்துள்ள ‘புரியாத புதிர்’, கே.வி ஆனந்த் இயக்கியுள்ள ‘கவண்’ ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.
இந்நிலையில் தற்பொழுது ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. . இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...