வங்கிகளில் மை  வைப்பது ஒரு கண் துடைப்பு வேலை:  வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம்

வங்கிகளில் அடிக்கடி பணம் எடுப்பதை தடுக்கும் பொருட்டு வங்கிகளில் பணம் எடுப்பவர்களின் கைகளில் மை வைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வெறும் கண் துடைப்புதான் என்று வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம்...
வங்கிகளில் மை  வைப்பது ஒரு கண் துடைப்பு வேலை:  வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம்

கொல்கத்தா: வங்கிகளில் அடிக்கடி பணம் எடுப்பதை தடுக்கும் பொருட்டு வங்கிகளில் பணம் எடுப்பவர்களின் கைகளில் மை வைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வெறும் கண் துடைப்புதான் என்று வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் பிஸ்வாஸ் கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பணம் எடுப்பவர்களின் கைகளில் மை வைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு. பெரும்பாலான வங்கிகளில் புதன்கிழமை இரவு வரை அந்த மை  பெறப்படவில்லை.இன்று கூட வங்கிகளுக்கு திருப்திகரமான அளவில் மை வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையமும் அந்த வகை அழியாத மையை வழங்க மறுத்து விட்டது. எனவே வேறு வழி இல்லாமல், எளிதில் அழிகின்ற மை வகையைதான் வங்கிகள் தற்போது பயன்படுத்துகின்றன.

உயர் மட்டத்தில் இருந்து முறையான அனுமதி இல்லாமல் மையை  வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com