முதல்வர் நாற்காலியில் ஜீயர் சுவாமி: தெலங்கானாவில் வெடிக்கிறது சர்ச்சை

தெலங்கானாவின் அதிகாரப்பூர்வ முதல்வர் இருக்கையில் டிரிடன்டி ஸ்ரீமன்நாராயணா ராமானுஜா சின்ன ஜீயர் சுவாமியை, முதல்வர் சந்திரசேகர ராவ் அமர வைத்தது குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
முதல்வர் நாற்காலியில் ஜீயர் சுவாமி: தெலங்கானாவில் வெடிக்கிறது சர்ச்சை


ஹைதராபாத்: தெலங்கானாவின் அதிகாரப்பூர்வ முதல்வர் இருக்கையில் டிரிடன்டி ஸ்ரீமன்நாராயணா ராமானுஜா சின்ன ஜீயர் சுவாமியை, முதல்வர் சந்திரசேகர ராவ் அமர வைத்தது குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

பெகும்பெட்டில் புதிதாக கட்டப்பட்ட தெலங்கானா முதல்வருக்கான அரசு வீடு மற்றும் அலுவலகம் திறப்பு விழாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கட்டட திறப்பு விழாவுக்கு வந்த ஜீயரை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், முதல்வருக்கான இருக்கையில் அமர வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்பட்டவருக்கான இருக்கையில் ஜீயரை அமர வைத்தது தவறு என்று சில அரசியல் ஆர்வலர்களும், இதுபோன்ற ஒரு சூழ்நிலையை ஜீயருக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டாம் என்று அவரது ஆதரவாளர்களும் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com