ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கு: அதிபர் ரால் காஸ்ட்ரோ அறிவிப்பு

உடல் நலக் குறைவால் உயிரிழந்த கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கு: அதிபர் ரால் காஸ்ட்ரோ அறிவிப்பு

உடல் நலக் குறைவால் உயிரிழந்த கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ இன்று தனது 90வது வயதில் இயற்கை மரணம் எய்தினார்.

இவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெறும் என்று ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரரும், கியூபா அதிபருமான ரால் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

ஃபிடல் காஸ்ட்ரோ 1926ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தவர். கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார்.

கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com