ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட காஷ்மீர் வந்த ராணுவ தளபதி தல்பீர் சிங், அதிரடித் தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நுழைந்து அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டு பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுவதால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இன்று வந்த ராணுவ தளபதி தல்பீர் சிங், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.
அப்போது, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


