ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ரவி நதியில் ஆளில்லா பாகிஸ்தான் படகு: கைப்பற்றியது பிஎஸ்எஃப்

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகே பாயும் ரவி ஆற்றில் ஆளில்லாத பாகிஸ்தான் நாட்டின் படகு ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

Updated On :4 அக்டோபர் 2016, 7:19 am


பதான்கோட்: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகே பாயும் ரவி ஆற்றில் ஆளில்லாத பாகிஸ்தான் நாட்டின் படகு ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லையில் இருந்து ரவி ஆற்றில் அடித்து வரப்பட்ட பாகிஸ்தான் படகு ஒன்றை சர்வதேச எல்லைக்கு அருகே பதான்கோட்டில் கைப்பற்றியுள்ளோம் என்று எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஆளில்லாத பாகிஸ்தான் படகு ஒன்று கைப்பற்றப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பினாலும், இது ஆற்றில் நீர் வரத்து அதிகரித்த காரணத்தினால் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேர் படகில் வந்தபோது இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.