அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பீகாரில் மீண்டும் வருது மதுவிலக்கு: பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!

பீகாரில் நிதிஷ் குமார் அரசால் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு சட்டத்திற்கு தடைவிதித்து பாட்னா உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இன்று தடைவிதித்துள்ளது. 

News image
Updated On :7 அக்டோபர் 2016, 10:41 am

DIN

பாட்னா: பீகாரில் நிதிஷ் குமார் அரசால் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு சட்டத்திற்கு தடைவிதித்து பாட்னா உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இன்று தடைவிதித்துள்ளது. 

பீகார் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, முழுமையான மதுவிலக்கை கொண்டுவருவோம் என வாக்குறுதி அளித்த நிதிஷ் குமார் தலைமையிலான மதசார்பற்ற மகா கூட்டணி ஆட்சியை பிடித்தது. வெற்றிக்குப் பின்னர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நிதிஷ்குமார் அரசு, கடந்த ஏப்ரல் மாதம் பூரண மதுவிலக்கு சட்டம் கொண்டு வந்தது.

மதுவிலக்கு சட்டத்துக்கு எதிராக மதுபான விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சில தனிநபர்கள் பீகார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு பிறப்பித்த மதுவிலக்கு அரசாணை சட்டவிரோதமானது என கூறி ரத்து செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பீகார் அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதீமன்றம் பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதன் மூலம் பீகாரில் மீண்டும் மதுவிலக்கு அமலுக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.