குடிநீர் மீட்டர்கள் கொள்முதலில்முறைகேடு: ஷீலா தீட்சித்துக்கு நோட்டீஸ்

தில்லியில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தின்போது குடிநீர் மீட்டர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அந்த மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு ஊழல் கண்காணிப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டில் தில்லி அரசு சார்பில் 2.5 லட்சம் குடிநீர் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒப்பந்தப் புள்ளிகள் முறையாகக் கோரப்படாமல், ஒரு நிறுவனத்துக்கு மட்டும் சாதகமான வகையில் கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகப் புகார் எழுந்தது.

அப்போது ஷீலா தீட்சித் தில்லி முதல்வராக இருந்தார். இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

அதில் புதிய திருப்பமாக, ஷீலா தீட்சித்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறும், குடிநீர் மீட்டர்கள் கொள்முதல் நடவடிக்கை முறைகேடு தொடர்பாக விளக்கமளிக்குமாறும் அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷீலா தீட்சித், "இது திட்டமிட்டு செயல்படுத்தப்படும் அரசியல் சதி' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com