யோகக் கலையை மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாற்றுங்கள்:மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தல்

சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை யொட்டி, யோகக் கலையை மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாற்றுங்கள் என்று அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
யோகக் கலையை மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாற்றுங்கள்:மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தல்

சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை யொட்டி, யோகக் கலையை மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாற்றுங்கள் என்று அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச யோகா தினம் என்பது நம்முடைய வாழ்க்கையில் யோகக் கலையை ஓர் அங்கமாக மாற்றுவதற்கான வழியாகும். யோகா தினத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும். அனைத்து வயதினரிடமும் யோகா சென்று சேரும்போது, அவர்களுடைய உடலும், மனதும் மேம்படும்.

யோகா தினத்தை மக்களின் நிகழ்ச்சியாக மாற்றவே நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நிகழ்ச்சியானது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். நிகழாண்டில் யோகா தின செயல்விளக்க நிகழ்ச்சியை சத்தீஸ்கரில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், மற்ற மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் யோகா தின நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட வேண்டும். எனவே, யோகக் கலையை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்ற நீங்கள் (மத்திய அமைச்சர்கள்) ஆதரவு அளிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

100 நாடுகளில் யோகா தினம்: இதனிடையே, உலகெங்கிலும் 100 நாடுகளில் சர்வதேச யோகா தினத்தை அனுசரிப்பதற்கு "வாழும் கலை' அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள யோகா தின நிகழ்ச்சியை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தொடங்கி வைக்கிறார். பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நகரில் நடைபெறும் இந்த விழாவின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோக பயிற்சிகளை செய்வதற்கு ரவிசங்கர் வழிகாட்டுகிறார். இதுகுறித்து "வாழும் கலை' அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வாஷிங்டன், பாஸ்டான், கொலம்பஸ், மின்னிசோட்டா, சான் பிரான்சிஸ்கோ, போர்ட்லாண்ட், லண்டன் போன்ற நகரங்களிலும் ரவிசங்கர் கலந்துகொள்ளும் யோகக் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com