ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பன்னோக்கு மருத்துவமனை, வைரம் உற்பத்தி நிறுவனத்தை மோடி திறந்து வைத்தார்

சூரத்: குஜராத்தில் 2-ம் நாளாக இன்று சுற்றுப் பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பன்னோக்கு மருத்துவமனை மற்றும் வைரம் உற்பத்தி

News image
Updated On :17 ஏப்ரல் 2017, 9:01 am

DIN

சூரத்: குஜராத்தில் 2-ம் நாளாக இன்று சுற்றுப் பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பன்னோக்கு மருத்துவமனை மற்றும் வைரம் உற்பத்தி நிறுவனத்தை திறந்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஒடிசா பயணத்தை முடித்துக் கொண்டு குஜராத் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், 2-வது நாளான இன்று சூரத் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பன்னோக்கு மருத்துவமனையை இன்று காலை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில திட்டங்கள் மூலம் மருந்து மற்றும் சிகிச்சை தொடர்பான உபகரணங்களின் விலை குறைக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலான மருந்து நிறுவனங்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, சூரத் நகரில் அமைக்கப்பட்டுள்ள வைர உற்பத்தி நிறுவனத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.