மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு 'திடீர்' ராஜிநாமா! 

மத்திய ரயில்வே அமைச்சராக உள்ள சுரேஷ் பிரபு தன்னுடைய பதவியை 'திடீர்' என்று ராஜிநாமா செய்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு 'திடீர்' ராஜிநாமா! 

புதுதில்லி: மத்திய ரயில்வே அமைச்சராக உள்ள சுரேஷ் பிரபு தன்னுடைய பதவியை 'திடீர்' என்று ராஜிநாமா செய்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சராக உள்ளவர் சுரேஷ் பிரபு. கடந்த வாரம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில், 20-க்கும் மேற்ப்பட்டோர் பலியானார்கள். இந்த விபத்திற்கு ரயில்வே ஊழியர்களின் அலட்சியம்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு விபத்துக்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் சமீபத்தில் நடந்த தொடர் ரயில் விபத்துக்களின் காரணமாக தான் மிகுந்த மன வேதனை அடைந்து இருப்பதாகவும், அதனால் உண்டான பொருள் இழப்பு குறித்து வருந்துவதாவதும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே நடைபெற்ற விபத்ததுகளுக்கு முழு பொறுப்பெற்று தான், தன் பதவியை ராஜிநாமா செய்வதாக சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய ரயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் இந்த விபத்ததுகளுக்கு பொறுப்பேற்று தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.        

ஆனால் பிரபுவின் ராஜினாமாவினை ஏற்காத பிரதமர் மோடி அவரை காத்திருக்குமாறு கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com