
மத்திய பிரதேச அரசு மருத்துவமனை செவிலியர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாகக் கூறி கைவிட்ட பெண் வெட்டவெளியில் குழந்தையை பத்திரமாகப் பிரசவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனை செவிலியர்கள் அங்குப் பிரசவ வலியில் அலறிய பெண்ணை சத்தம் போடாமல் இருக்கச் சொல்லி அடித்துள்ளனர். பின்னர் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாகக் கூறி ஓரமாகப் படுக்க வைத்து அலட்சியமாகக் கையாண்டுள்ளனர். வலி தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் மருத்துவமனையை விட்டு வெளியேறிய அந்தப் பெண் அருகில் இருக்கும் வறண்ட வயல் நிலத்தில் விழுந்து அலறியுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அங்கேயே பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். சிறிது நேரப் போராட்டத்திற்கு குழந்தையை உயிருடன் பிரசவித்தார் அந்தப் பெண். மருத்துவமனையில் வயிற்றிலேயே இறந்துவிட்டதாகக் கூறிய குழந்தை நல்ல படியாக பிறந்தது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் மருத்துவமனையின் அலட்சியப் போக்கை மக்கள் கண்டித்துள்ளனர். வயல்வெளியில் அந்தப் பெண்ணிற்கு கிரமத்து மக்கள் பிரசவம் பார்ப்பதை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
வீடியோ - நன்றி: ANI
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.