கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜனாதிபதி பிரணாப்புடன் படம் பார்க்கப் போகும் அமிதாப், டாப்ஸி! 

நடிகர் அமிதாப் பச்சன், நடிகை டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டை பெற்ற 'பிங்க்' திரைப்படத்தை, இவர்களிருவருடன் இணைந்து ...

News image
Updated On :25 பிப்ரவரி 2017, 5:56 am

DIN

புதுதில்லி: நடிகர் அமிதாப் பச்சன், நடிகை டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டை பெற்ற 'பிங்க்' திரைப்படத்தை, இவர்களிருவருடன் இணைந்து ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு பிரணாப் முகர்ஜீ பார்க்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அமிதாப் பச்சன், நடிகை டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பிங்க்'. தற்போதைய சமூக  சூழலில் ஒரு இளம்பெண்ணின் பாலியல் தேர்வுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து நீதிமன்ற வழக்கு விசாரணை பின்னணியில் பேசிய படமாக இது அமைந்தது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டை ஒருங்கே பெற்ற படமாகவும் இது அமைந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜீ இன்று இரவு ஜனாதிபதி மாளிகையில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை டாப்சி ஆகிய இருவருடனும் இணைந்து பார்க்க உள்ள தகவலை அமிதாப் பச்சன் தன்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார்.

மேலும் கலை மற்றும் அது தொடர்பான விஷயங்களுக்கு தன்னுடைய நேரத்தை ஒதுக்கி செயல்படும் ஜனாதிபதியை நாம் இன்னும் நன்றாக பாராட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல நடிகை டாப்ஸியும் இது குறித்த தன்னுடைய மகிழ்ச்சியை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.