ஜனாதிபதி பிரணாப்புடன் படம் பார்க்கப் போகும் அமிதாப், டாப்ஸி!
நடிகர் அமிதாப் பச்சன், நடிகை டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டை பெற்ற 'பிங்க்' திரைப்படத்தை, இவர்களிருவருடன் இணைந்து ...


புதுதில்லி: நடிகர் அமிதாப் பச்சன், நடிகை டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டை பெற்ற 'பிங்க்' திரைப்படத்தை, இவர்களிருவருடன் இணைந்து ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு பிரணாப் முகர்ஜீ பார்க்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன், நடிகை டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பிங்க்'. தற்போதைய சமூக சூழலில் ஒரு இளம்பெண்ணின் பாலியல் தேர்வுகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து நீதிமன்ற வழக்கு விசாரணை பின்னணியில் பேசிய படமாக இது அமைந்தது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டை ஒருங்கே பெற்ற படமாகவும் இது அமைந்தது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜீ இன்று இரவு ஜனாதிபதி மாளிகையில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை டாப்சி ஆகிய இருவருடனும் இணைந்து பார்க்க உள்ள தகவலை அமிதாப் பச்சன் தன்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார்.
மேலும் கலை மற்றும் அது தொடர்பான விஷயங்களுக்கு தன்னுடைய நேரத்தை ஒதுக்கி செயல்படும் ஜனாதிபதியை நாம் இன்னும் நன்றாக பாராட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல நடிகை டாப்ஸியும் இது குறித்த தன்னுடைய மகிழ்ச்சியை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...