லக்னோ: கடின உழைப்பால் உருவான சமாஜவாதி கட்சி உடைய விட மாட்டேன் என்று அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் சூளுரைத்துள்ளார்.
முலாயம்சிங்கின் மகனும் , உத்தரபிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் சிங் யாதவ் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் முலாயம் சிங் யாதவ் இன்று அவருடைய ஆதரவாளர்களிடம் பேசினார். அப்பொழுதுஅவர் கூறியதாவது;
கட்சி இரண்டாக உடைவதை தடுப்பதற்காகவே நன் தில்லி சென்றேன். உங்களுக்காக நான் வேறு என்ன செயய் இயலும்? நமது கடின உழைப்பில் உருவான இந்த கட்சி மீதான உங்கள் அக்கறையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் எந்த புதுக்கட்சியையும் தொடங்கப் போவதில்லை. அதே போல் கட்சி சின்னமான சைக்கிளை யும் மாற்றப் போவதில்லை.
அகிலேஷ் தலைமையிலான கட்சியின் பிரிவானது 'அகில பாரதீய சமாஜவாதி கட்சி' என்ற புதிய பெயரையும், மோட்டார் சைக்கிள் சின்னத்தையம் தேர்தல் ஆணையத்திடம் கோரியிருப்பதாகத் தெரிவித்த முலாயம், அக்கட்சியை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
கட்சியின் பிளவுக்கு காரணமான ராம் கோபால் யாதவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்த அவர் இந்த கட்சி உடைய வேண்டுமென்று விரும்புபவர்கள் எதிர்கட்சித் தலைவர்களையெல்லாம் சென்று சந்திக்கிறார்கள்; என்னிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளது.ஆனால் இந்த கட்சி உடைய நான் விட மாட்டேன் என்று அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதி ஏர்டெல் 4வது காலாண்டு நிகர லாபம் 7,325 கோடியாக சரிவு!
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!

என்.எல்.சி இந்தியா 4வது காலாண்டு லாபம் ரூ. 1,393 கோடியாக உயர்வு!

பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதல்வர் விஜய் அறிக்கை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

